தசரா பண்டிகை கோலாகலம் - ராவண உருவ பொம்மை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது..!

0 1795
தசரா பண்டிகையை முன்னிட்டு நேற்றிரவு பல்வேறு வடமாநில நகரங்களில் ராவண உருவ பொம்மை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

தசரா பண்டிகையை முன்னிட்டு நேற்றிரவு பல்வேறு வடமாநில நகரங்களில் ராவண உருவ பொம்மை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

தீமையை நன்மை வென்ற நாளாக கருதப்படும் தசரா நாளில் அசுர வம்சத்தை அழித்த தேவர்களைப் போற்றி கொண்டாட்டங்கள் களை கட்டின. பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் 30 அடி உயர ராவணன் உருவம் எரிக்கப்பட்டது.

நொய்டாவில் ராவணன் உருவத்துடன் கும்பகர்ணனின் உருவமும் தீயிட்டுப் பொசுக்கப்பட்டது. டெல்லி சாஸ்திரி பூங்காவிலும் ராவண தகனம் நிகழ்ச்சி கோலாகலமாக அரங்கேற்றப்பட்டது.

கொரோனா, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை தீயசக்திகளாக உருவகம் செய்து இந்த ஆண்டு ராவண உருவ பொம்மைகளுடன் இணைத்து தீயிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments