8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
ஐ.பி.எல் தொடரின் 44 வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி 145 ரன்கள் எடுத்தது.
கேப்டன் விராட் கோலி அதிகப்பட்சமாக 50 ரன்கள் குவித்தார். சி.எஸ்.கே தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்களும், தீபக் சாஹர் 2 விக்கெட்களும் எடுத்தனர்.
எளிய இலக்கை சேஸ் செய்த சி.எஸ்.கே அணி 18.4 ஓவரில், 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
துவக்க வீரர் Ruturaj Gaikwad 51 பந்தில் 65 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Comments