ரஷ்யாவுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலில் வெடிவிபத்து - ஊழியர்கள் 3 பேர் மாயம்

0 1762
ரஷ்யாவுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலில் வெடிவிபத்து - ஊழியர்கள் 3 பேர் மாயம்

ரஷ்யாவுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலில் வெடி விபத்து ஏற்பட்ட நிலையில், மாயமான 3 ஊழியர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் துறைமுகத்தை நோக்கி கெர்ச் நீரிணை வழியாக 13 ஊழியர்களுடன் சென்ற கப்பல், திடீரென வெடி விபத்துக்குள்ளானது.

இதில் மாயமான 9 பேரில், 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கப்பலில் எண்ணெய் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments