இட ஒதுக்கீட்டை தவறாமல் பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யுசிஜி சுற்றறிக்கை

0 1364
இட ஒதுக்கீட்டை தவறாமல் பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யுசிஜி சுற்றறிக்கை

பட்டியலினத்தவர், பின்தங்கிய வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை தவறாமல் அமல்படுத்த வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.

சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தவிர்த்த மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு இது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களில் இருக்கும் இட ஒதுக்கீட்டு விகிதாச்சாரங்களின்படி, இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை தங்களது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வகையில் நிரப்பப்டாமல் காலியாக இருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், மாணவர் சேர்க்கை, ஆகியவற்றை தாமதமின்றி நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments