தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், மத்திய குழுவினர் ஆய்வு
தஞ்சை மாவட்டம் குரு வாடிப்பட்டியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று ஆய்வு செய்த மத்திய குழுவினர், விவசாயிகளிடம் நெல்லின் ஈரப்பதம் குறித்து கேட்டறிந்து மாதிரிகளை எடுத்து சென்றனர்.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் அறுவடை செய்த நெல் மழையில் நனைந்து சேதமடைந்தது. இதனால் கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இக்கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இதைத் தொடர்ந்து மத்திய அரசால் அனுப்பப்பட்ட 3 பேர் குழு நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று ஆய்வு செய்தது. மத்திய அரசிடம் வரும் 27ஆம் தேதி தங்களது அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக அக்குழு தெரிவித்துள்ளது.
Comments