திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவில் பக்தர்கள் ரூ.12.48 கோடி உண்டியல் காணிக்கை

0 1195
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவில் பக்தர்கள் ரூ.12.48 கோடி உண்டியல் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது உண்டியல் காணிக்கையாக 12 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.

கோயிலில் கடந்த 16 தேதி முதல் நேற்று வரை பிரமோற்சவம் நடைபெற்றது. பிரம்மோற்சவத்துக்கு வழக்கமாக லட்சகணக்கான பக்தர்கள் வரும் நிலையில், கொரோனா பரவல் காரணமாக குறைந்தபட்ச எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே இந்தாண்டு அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் 9 நாட்களிலும் 1 லட்சத்து 57 ஆயிரத்து 966 பக்தர்களே சாமி தரிசனம் செய்தனர். இதில் 50ஆயிரத்து 791 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும் உண்டியல் காணிக்கையாக 12 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கோயிலில் இலவச தரிசனம் குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்பட இருப்பதாக தேவஸ்தான செயல் அலுவலர் ஜவஹர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments