தைவானுக்கு ரூ.13,000 கோடி மதிப்பில் ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்
தைவானுக்கு சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் ராணுவ வாகனங்களைத் தாக்கும் ராக்கெட் லாஞ்சர்கள், ஏவுகணைகள், வான்வழி உளவு அமைப்புகள், கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகள் அடங்கும் என கூறப்படுகிறது.
இதில் 64 ஏவுகணைகள் கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டவை. இதன் மூலம் சீனாவின் கடற்கரை நகரங்களைத் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஆயுத விற்பனைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Comments