6 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேஷிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு..?
6 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேஷிய விமானத்தின் சிதைவுகள் ஆஸ்திரேலியா அருகே கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2014ம் ஆண்டு கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்குச் சென்ற எம் ஹெச் 370 என்ற விமானம் 239 பேருடன் திடீரென மாயமானது. கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என சுமார் 1400 கோடி ரூபாய் செலவில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் தேடுதல் வேட்டை நடந்தும் பலனில்லாமல் இருந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பெர்த் கடற்கரையில் இருந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் விமானத்தின் சிதைவுகள் காணப்படுவதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தேடுதல் குழு தெரிவித்துள்ளது.
Comments