ஹெச்1பி விசாவுக்கு விதிக்கப்பட்ட தடையால் அமெரிக்க நிறுவனங்களுக்கு ரூ.7.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்
ஹெச்1பி விசாவுக்கு விதிக்கப்பட்ட தடையால் அமெரிக்க நிறுவனங்களுக்கு 7 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், அமெரிக்க அரசின் தடை காரணமாக சுமார் 2 லட்சம் வெளிநாட்டுப் பணியாளர்கள் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் திறமைமிக்க வெளிநாட்டுப் பணியாளர்களைப் பணியில் அமர்த்துவது நிறுவனத்தின் வருவாய், புத்தாக்கம், பணித்திறன், முதலீடு உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் என்பது உறுதியாவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments