ஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

0 2142
ஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

அபுதாபியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 81 ரன்களும், சுனில் நரைன் 64 ரன்களும் சேர்த்தனர்.

195 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு சரியான துவக்க கிடைக்காத போதும், சற்று நிலைத்து ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 47 ரன்களிலும், ரிஷப் பாண்ட் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 135 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments