மத்திய அரசு கோரினால் முன்னதாகவே தடுப்பூசி தயாரிக்க முடியும் - பாரத் பயோடெக் நிறுவனம்
மத்திய அரசு அவசரமாக தேவை என்று தெரிவித்தால் கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்க தயார் என்று ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த நிறுவனத்தின் செயல் இயக்குனர் சாய் பிரசாத் நவம்பர் முதல் வாரம் முதல் கோவேக்சின் மருந்தின் 3-வது கட்ட பரிசோதனை நடைபெறும் என்றார்.
இந்த பரிசோதனை ஏப்ரல் அல்லது மே மாதம் வரை நடைபெறும் என்றும், அதன் பின் மத்திய அரசுக்கு அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனை ஆய்வு செய்து, மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் ஜூன் மாதம் மருந்து தயாரிக்கும் பணியை தொடங்க முடியும் என்று அவர் கூறினார். மத்திய அரசு அவசர தேவை என்று தெரிவித்தால் கொரோனா தடுப்பூசியை முன்னதாக தயாரிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
Comments