சென்னையில் நவம்பர் மாதம் முதல் மின்சார ரயில் இயக்க வாய்ப்பு..?

0 4061
அடுத்த மாதம் முதல் வாரம் முதல் சென்னையில் மின்சார ரெயில் சேவையை தொடங்க வாய்ப்பு இருப்பதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த மாதம் முதல் வாரம் முதல் சென்னையில் மின்சார ரெயில் சேவையை தொடங்க வாய்ப்பு இருப்பதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் அரசு ஊழியர்கள், ரெயில்வே பணியாளர்கள் பணிக்கு செல்ல சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் தனியார் ஊழியர்கள்,மக்கள் பயணம் செய்ய அனுமதி இல்லை. இந்த நிலையில் புறநகர் மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரெயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதைத்தொடர்ந்து மின்சார ரெயில் சேவையை தொடங்க சென்னை டிவிசன் தயாராகி வருகிறது. அனுமதி அடுத்த வாரம் கிடைக்கும் என்றும் நவம்பர் முதல் வாரம் முதல் மின்சார ரெயில் சேவையை தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments