அமெரிக்காவின் மத்தியஸ்தம் பேரில் சுமுக உறவை ஏற்படுத்தி கொள்ள இஸ்ரேல், சூடான் ஒப்புதல்

0 1177
இஸ்ரேல் மற்றும் சூடான் நாடுகள் தங்களிடையே சுமுக உறவை ஏற்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன.

இஸ்ரேல் மற்றும் சூடான் நாடுகள் தங்களிடையே சுமுக உறவை ஏற்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன.

பாலஸ்தீன விவகாரத்தால் இஸ்ரேலை அரேபிய நாடுகள் அங்கீகரிக்காமல் உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் பேரில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் முதலாவதாகவும், பஹ்ரைன் நாட்டுடன் 2ஆவதாகவும் இஸ்ரேல் அண்மையில் ஒப்பந்தம் செய்தது.

இதையடுத்து சூடான், இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, சூடான் பிரதமர் அப்தல்லா ஹாம்டோக்குடன் (Abdalla Hamdok) அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசி உறுதி செய்தார்.

பயங்கரவாத ஊக்குவிப்பு நாடுகள் பட்டியலில் இருந்து சூடானை நீக்கும் தகவலை அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு டிரம்ப் தெரிவித்தார்.

இதையடுத்து இஸ்ரேல் மற்றும் சூடான் இடையே ஒப்பந்தம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 மாதங்களில், 3 அரேபிய நாடுகள் இஸ்ரேலை அங்கீகரித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments