ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலம் நீட்டிப்பு
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலம் ,மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2017 -ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள் என 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.
விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதித்ததால், கடந்த 21 மாதங்களாக விசாரணை நடைபெறவில்லை இந்நிலையில், 9 -வது முறையாக இப்போது கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட அவகாசம், இன்றுடன் முடிவடைந்த நிலையில் கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Comments