இந்தியா-சீனா பதற்றம் அதிகரிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறோம்: அமெரிக்கா
இந்தியா-சீனா இடையேயான பதற்றம் அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் டு பிளஸ் டு பேச்சுவார்த்தைக்காக வருகிற 26ஆம் தேதி இந்தியாவுக்கு வரவுள்ளனர்.
இந்நிலையில் லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே நிலவும் பதற்றத்தை தங்களது நாடு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இது அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாகவும் அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்சீன கடலில் ராணுவ இருப்பு உள்பட தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் செயல்பாட்டை வரவேற்பதாகவும், இமயமலை முதல் தென்சீனக் கடல் வரை சீனாவின் ஆத்திரமூட்டும் செயலுக்கு எதிராக இந்தியா போன்ற ஒத்த கருத்துகளை கொண்ட நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Comments