கொள்முதல் நெல்லின் ஈரப்பதம் - மத்திய குழு ஆய்வு..!
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வைத் தொடங்கினர்.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி வழங்கிட மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் சனிக்கிழமை வர உள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய உணவு மற்றும் தரகட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதம் குறித்து கேட்டறிந்த அதிகாரிகள், நெல்லின் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்துவதற்காக சேகரித்துக் கொண்டனர்.
மயிலாடுதுறையைத் தொடர்ந்து நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த சாட்டியக்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு வந்த மத்திய உணவு மற்றும் தரகட்டுப்பாடு அதிகாரிகள், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர். நெல்லின் மாதிரிகளையும் சோதனைக்கு உட்படுத்துவதற்காக சேகரித்து வைத்துக் கொண்டனர்.
Comments