பென்னு என்னும் குறுங்கோளில் சேகரிக்கப்பட்ட மண் துகள்கள் விண்ணில் கசிவதாக விஞ்ஞானிகள் கவலை
பென்னு என்னும் குறுங்கோளில் கைப்பற்றப்பட்டு சேகரிக்கப்பட்ட மண் துகள்கள், விண்கலத்தில் இருந்து கசிந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பூமியில் இருந்து 200 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள பென்னுவில் தரையிறங்கிய ஓஸிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலம், 11 அடி நீளமுடைய இயந்திர கைகள் மூலமாக வட துருவ கற்களின் மாதிரிகளை கைப்பற்றியது.
இந்த இயந்திர கைகளுடன் இணைக்கப்பட்டுள்ள, மாதிரித்துகள் சேகரிப்பு கொள்கலன், குறுங்கோளின் கடினமான மேற்பரப்பில் மோதியதால் சேதமடைந்ததாகவும், இதனால் துகள்கள் விண்வெளியில் கசிவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Comments