"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஸ்பெயினில் உண்மையான கொரோனா பாதிப்பு 30 லட்சத்துக்கும் மேல் இருக்கக்கூடும் - ஸ்பெயின் பிரதமர் தகவல்
ஸ்பெயினில் 10 லட்சம் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உண்மையான பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்துக்கும் மேல் இருக்கக்கூடும் என்று அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்சேஸ் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா கண்டத்தில் கொரோனா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் திகழ்கிறது. அந்நாட்டில் இதுவரை 34 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பெயின் பிரதமர், நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் மிகவும் தீவிரமாக இருப்பதாகவும், வரும் மாதங்களில் மோசமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
Comments