மதுரை அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து உயிரிழப்பு 7 ஆக உயர்வு- 3 பேருக்கு தீவிர சிகிச்சை

0 1699
மதுரை அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து உயிரிழப்பு 7 ஆக உயர்வு- 3 பேருக்கு தீவிர சிகிச்சை

மதுரை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் பட்டாசுகள் தயாரித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் சம்பவ இடத்திலேயே 5 பெண் தொழிலாளர்கள் பலியான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமி மற்றும் மகாலட்சுமி ஆகியோர் பலியாகினர்.மேலும் 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments