கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அடுத்த 3 மாதங்கள் முக்கியமானதாக இருக்கும்: மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
நாட்டில் கொரோனா வைரசின் நிலையை தீர்மானிப்பதில், அடுத்த 3 மாதங்கள் முக்கியமானதாக இருக்கும் என, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, உத்தரபிரதேச மாநில அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசியவர், பண்டிகை மற்றும் குளிர்காலத்தை எதிர்கொள்ள உள்ளதால், பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.
வடமாநிலங்களில் பரிசோதனை மற்றும் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் ஹர்ஷவர்தன் வலியுறுத்தியுள்ளார்.
Delhi: Union Health Minister Harsh Vardhan held a meeting with Ministers and officials of Uttar Pradesh through video conferencing to review the #COVID19 situation in the State, earlier today pic.twitter.com/G5pomnv7TR
— ANI (@ANI) October 23, 2020
Comments