ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி-கொல்கத்தா, ஐதராபாத்-பஞ்சாப் அணிகள் மோதல்
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.
அபுதாயில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. 7 வெற்றிகளுடன் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திலும், 5 வெற்றிகளுடன் கொல்கத்தா 4வது இடத்திலும் உள்ளது.
தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் மற்றொரு போட்டியில், ஐதராபாத் அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
தலா 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முறையே 5 மற்றும் 6வது இடத்தில் உள்ள ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள், பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க இன்று வெற்றிபெற வேண்டியது கட்டாயமாக உள்ளது.
Comments