நெல்லின் ஈரப்பத அளவு குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று தமிழகம் வருகை
நெல் ஈரப்பத அளவு குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று தமிழகம் வர உள்ளனர்.
நெல் ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக உயர்த்த தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து நெல் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் இன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளதாக நுகர்பொருள் வாணிபகழக நிர்வாக இயக்குநர் சுதாதேவி தெரிவித்துள்ளார்.
மத்தியக் குழுவினரின் ஆய்வுக்குப் பிறகு நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments