மகாராஷ்டிராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உதவி - உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மகாராஷ்டிராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகளை அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக முக்கியத் தலைவர்களுடன் பேசியதாகவும், மத்திய அரசிடம் கோரிய 38 ஆயிரம் கோடி ரூபாய் இதுவரை வந்து சேரவில்லை என்றும் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் தொகை பகுதி பகுதியாக வழங்குவதில் தனக்கு உடன்பாடில்லை எனக் குறிப்பிட்ட அவர், தாங்கள் வழங்கும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
Comments