தேசியக் கொடி பற்றிய மெஹ்பூபா முப்தியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்

0 1958
தேசியக் கொடி பற்றிய மெஹ்பூபா முப்தியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்

நாட்டின் தேசியக் கொடி குறித்து மெஹ்பூபா முப்தி தெரிவித்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மெஹ்பூபா போன்ற தலைவர்கள் பிரிவினைவாதிகளை விட ஆபத்தானவர்கள் என்றும், பதவி இருக்கும்வரை நாட்டின் பெருமை பேசிவிட்டு பதவி போனதும் பாகிஸ்தானின் குரலில் பேசுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்தர சிங் விமர்சித்துள்ளார்.

ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய மெஹ்பூபா, காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 மீண்டும் அமல்படுத்தப்பட்டு தனி அந்தஸ்தை சித்தரிக்கும் காஷ்மீர் கொடியை பறக்க விடும் போதுதான் தேசியக் கொடியையும் இம்மாநிலத்தில் பறக்க விட முடியும் என்று கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments