பெண்கள் பற்றி திருமாவளவன் சொன்னது என்ன ? குஷ்பூ விளாச இது தான் காரணம்
இந்து மத பெண்கள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இழிவாக கருத்து தெரிவித்ததாக நடிகை குஷ்பூ கண்டனக் குரல் எழுப்பியிருந்த நிலையில், பெண்கள் குறித்து தவறாகப் பேசியதாக திருமாவளவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெரியாரும் இந்திய அரசியலும் என்ற பெயரில் நடத்தப்பட்ட காணொலிக் கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பங்கேற்று பேசி இருந்தார்.
திருமாவளவனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாரதிய ஜனதாவின் மகளிரணியை சேர்ந்த நடிகை குஷ்பூ, திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளார்.
பெண்கள் குறித்து இழிவாக பேசியதற்கு காங்கிரஸ் மற்றும் கனிமொழி மவுனம் காப்பது ஏன்? என்றும் குஷ்பூகேள்வி எழுப்பியுள்ளார்
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் அளித்த புகாரின் பேரில் திருமாவளவன் மீது பெண்களுக்கு எதிராக தவறாக பேசியதாக 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே திருமாவளவன் கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Comments