FATF அமைப்பினால் சாம்பல் நிற பட்டியலில் வைக்கப்பட்ட பாகிஸ்தான்

0 2594

பயங்கரவாதிகளின் புகலிடமாகத் திகழும் பாகிஸ்தானை, தொடர்ந்து, சாம்பல் நிற பட்டியலில் வைத்திருக்க,  உலகளாவிய பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாத நிதியுதவி தடுப்பு கண்காணிப்பு அமைப்பான FATF முடிவு செய்துள்ளது.

பயங்கரவாத நிதியுதவியை முழுவதுமாக கண்காணிக்க பாகிஸ்தானுக்கு மொத்தம் 27 செயல் திட்ட நிபந்தனைகளை FATF வழங்கியிருந்தது.

ஆனால், அதில் 21ஐ மட்டும் நிறைவேற்றிய பாகிஸ்தான், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளை பிடிப்பது, தீவிரவாத முகாம்களை அகற்றுவது, தீவிரவாதிகளுக்கான நிதியுதவிகளைத் தடுப்பது உள்ளிட்ட  சில முக்கிய பணிகள் குறித்து, பதிலளிக்கத் தவறிவிட்டது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டை, தொடர்ந்து சாம்பல் நிற பட்டியலில் வைக்க FATF முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments