சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் செலுத்தியவர்கள், குறுஞ்செய்தி வந்தாலும் மீண்டும் கட்ட வேண்டாம்-போலீசார்

0 2888

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் செலுத்தியவர்கள், குறுஞ்செய்தி வந்தாலும் மீண்டும் கட்ட வேண்டாமென போலீசார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து விதிகளை மீறியதாக சென்னையை சேர்ந்த இப்ராஹிம் என்பவருக்கு கடந்த மாதம் 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இரண்டே  நாட்களில் அவர் அபராதத்தை செலுத்திய நிலையில், 3000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என எஸ்எம்எஸ் மூலம் தகவல் வந்தது. 

இதே போல், அக்டோபர் 1ம் தேதிக்கு முன் அபராதத்தை செலுத்தி சிலருக்கும், அபராதத் தொகையை செலுத்தக்கோரி குறுஞ்செய்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்த போக்குவரத்து போலீசார், தொழில்நுட்ப கோளாறு காரணமாக  இது போன்ற எஸ்எம்எஸ்கள் வருவதாகவும், ஏற்கனவே அபராதம் கட்டியவர்கள் மீண்டும் கட்ட வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments