நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முன் ஆஜராக முடியாது-அமேசான்
தனிநபர் தரவுகள் பாதுகாப்பு சட்டம் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முன்பாக ஆஜராக முடியாது என அமேசான் மறுத்துள்ளது.
இது நாடாளுமன்ற உரிமைகளை மீறும் செயல் என்பதால், வரும் 28 ஆம் தேதி அமேசான் பிரதிநிதிகள் ஆஜராகவில்லை என்றால், அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆனால்,இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய தனது நிபுணர்கள் வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த காலகட்டத்தில் அவர்கள் இந்தியா வருவது இயலாத காரியம் என்றும் அமேசான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Comments