இந்திய ரயில்வேயில் 1.40 லட்சம் காலி பணியிடங்களுக்கு 2.40 கோடி பேர் விண்ணப்பம்

0 3519
இந்திய ரயில்வேயில் 1.40 லட்சம் காலி பணியிடங்களுக்கு 2.40 கோடி பேர் விண்ணப்பம்

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் பணியிடங்களுக்கு, 2 கோடியே 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அலுவலக உதவியாளர், பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் 3 பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன.

கணினி அடிப்படையிலான தேர்வு வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.

அதற்கான கால அட்டவணை விரைவில் ரயில்வே வாரிய இணையதளத்தல் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு காரணமாக தேர்வு நடைபெறுவது தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments