நவ.17 முதல் கல்லூரிகளை திறக்க கர்நாடக அரசு முடிவு
பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலைக் கல்லூரிகளை வரும் 17 ஆம் தேதி திறக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனாவால் மூடப்பட்டு கிடக்கும் கல்லூரிகளை திறப்பதற்கான முடிவு முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக துணை முதலமைச்சர் அஷ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
கல்லூரிகளில் வகுப்புக்கு நேரடியாக செல்லவோ , ஆன்லைனில் படிக்கவோ அல்லது இந்த இரண்டு விதமாகவும் படிக்கவோ மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அவர் கூறினார்.
அதே சமயம் மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு வர பெற்றோரின் அனுமதி வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Karnataka: Chief Minister BS Yediyurappa and Deputy CM Ashwath Narayan today held a meeting with educational experts and Department officials, over reopening of Pre-university colleges. pic.twitter.com/Vxq7zzp3Qi
— ANI (@ANI) October 23, 2020
Comments