எஸ்.பி.ஐ தேர்வு, வங்கிப் பணியாளர் தேர்வு, யுபிஎஸ்சி ஆகிய தேர்வுகளில் சமூக அநீதி தொடர்கிறது - மு.க.ஸ்டாலின் கண்டனம்

0 1621
எஸ்.பி.ஐ தேர்வு, வங்கிப் பணியாளர் தேர்வு, யுபிஎஸ்சி ஆகிய தேர்வுகளில் சமூக அநீதி தொடர்கிறது - மு.க.ஸ்டாலின் கண்டனம்

எஸ்.பி.ஐ தேர்வு, வங்கிப் பணியாளர் தேர்வு, யுபிஎஸ்சி ஆகிய தேர்வுகளில் சமூக அநீதி தொடர்ந்து இழைக்கப்பட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கினை உச்சநீதிமன்றத்தில் விரைந்து நடத்தாமல் தாமதப்படுத்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, முழுக்க முழுக்க இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கு எதிரானது என்பது தினமும் அம்பலப்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் மத்திய அரசுப் பணிகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலையில் சேருவதற்கு, தடைகளை ஏற்படுத்தி, இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படை அம்சங்களைத் தகர்த்தெறியும் செயல் கண்டனத்திற்குரியது என மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments