சென்னை தி.நகரில் 2.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : செல்போன் அழைப்புகளை வைத்து விசாரிக்க தனிப்படை முடிவு
தியாகராய நகர் உத்தம் ஜூவல்லரியில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள 4.5 கிலோ தங்க வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், அப்பகுதியில் பதிவான மொத்த செல்போன் அழைப்புகளை வைத்து அடுத்த கட்ட விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர்.
கொள்ளையன் இரவு 12 மணிக்கு கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து விட்டு அதிகாலை 4.30 மணி வரை கடையின் முன்பாக அமர்ந்திருப்பதும், இடைப்பட்ட நேரத்தில் மற்றொரு கொள்ளையனுடன் செல்போனில் பேசுவதும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
தியாகராயர் நகரிலிருந்து சைதாப்பேட்டை வரை உள்ள சிசிடிவி காட்சிகளில் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் செல்வது பதிவாகியுள்ளது.
ஆனால் முகம் மற்றும் இருசக்கர வாகனத்தின் பதிவு எண் என எதுவுமே தெளிவாக இல்லாததால் செல்போன் டவர் அழைப்பு விசாரணையை தனிப்படை போலீசார் துவக்கியுள்ளனர்.
Comments