அடுத்தடுத்து வரும் பண்டிகைகளால் அதிகரித்த பூக்களின் விலை..!
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்து வரும் பண்டிகைகளால் தமிழகம் முழுவதும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சேலம் சந்தைகளுக்கு பூக்களின் வரத்து அதிகரித்த போதிலும் விலை உயர்ந்தே காணப்பட்டது.
வ.உ.சி சந்தையில் கிலோ 240 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரளிப் பூ 300 ரூபாய்க்கும் கிலோ நூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட சாமந்திப்பூ 120 ரூபாய்க்கும் 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரோஜாப்பூ 180 ரூபாய்க்கும் விற்பனையானது.
கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையான குண்டுமல்லி 700 ரூபாய்க்கு விற்பனையானது.
மதுரை மாட்டுத்தாவணி பூ சந்தையில் கடந்த வாரம் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ 800 ரூபாய்க்கு விற்பனையானது.
கிலோ 700 ரூபாய்க்கு விற்ற கனகாம்பரம் 1000 ரூபாய்க்கும் 300க்கு விற்ற பிச்சு ரூ.500க்கும் 100 ரூபாய்க்கு விற்ற செவ்வந்தி பூ 250 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கிலோ 150 ரூபாய்க்கு விற்ற அரளிப்பூ ரூ.400க்கு விற்பனையாகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 750 க்கும், முல்லை கிலோ 650 ரூபாய்க்கும் கனகாம்பரம் 1000 ரூபாய்க்கும் கோழிக்கொண்டை கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ. 740 க்கும் சம்பங்கி கிலோ 220 ரூபாய்க்கும், செவ்வந்தி பூ கிலோ ரூ.150 க்கும், செண்டு மல்லி கிலோ ரூ.110 க்கும், கோழிக்கொண்டை பூ கிலோ ரூ 150 க்கும் விற்பனையானது.
நாளையும் பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Comments