கப்பல் அழிப்பு ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை

0 2350
கப்பல் அழிப்பு ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை

எதிரிநாடுகளின் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

கால்வன் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தால் லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியா சுமார் 2 மாதங்களாக தொடர்ந்து பல்வேறு ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது.

தாக்குதல் தூரம் நீட்டிப்பு செய்யப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை, கப்பலில் இருந்து செலுத்தும் வடிவிலான பிரம்மோஸ் ஏவுகணை, 350 கிலோ மீட்டர் தூர தாக்கும் வல்லமை கொண்ட பிருத்வி-2 ஏவுகணை, 750 கிலோ மீட்டர் தூரம் வரை அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்கும் சவுர்யா ஏவுகணை உள்ளிட்ட ஏவுகணைகளை பரிசோதித்தது.

இந்நிலையில், கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணையை இந்திய கடற்படை இன்று பரிசோதனை நடத்தியுள்ளது. அரேபிக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஏவுகணை தாங்கி கப்பலான ஐஎன்எஸ் பிரபாலில் இருந்து அந்த ஏவுகணை செலுத்தப்பட்ட காட்சி, பின்னர் அதிவேகமாக பறந்து சென்று ஏவுகணை தொலைவில் நிறுத்தப்பட்டு இருந்த பழைய கடற்படை கப்பலான கோதாவரியை மிகத்துல்லியமாக தாக்கி மூழ்கடிக்கும் காட்சியை ட்விட்டர் பக்கத்தில் இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது.

பிரபால் கப்பலில், 16 ரஷ்ய தயாரிப்பு கே.எச்.35 உரான் ரக, கப்பல் தகர்ப்பு ஏவுகணைகள் உள்ளன. அந்த ஏவுகணைகள் அதிகபட்சமாக 130 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது என தகவல்கள் கூறுகின்றன.

தாக்கி மூழ்கடிக்கப்பட்ட கோதாவரி கப்பல், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கப்பலாகும். கடற்படையில் 1983ம் ஆண்டு சேர்க்கப்பட்ட அக்கப்பலுக்கு 2015ம் ஆண்டில் விடை கொடுக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments