நிறைவு கட்டத்தில் தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய்: திசையன்விளை, ராதாபுரம் நெல் விளையும் பூமி ஆகுமா?

0 4826

நெல்லை , தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை, சாத்தான்குளம், ராதாபுரம் பகுதிகளை செழிப்படைய வைக்கும் வெள்ள நீர் கால்வாய் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் தென் பகுதியான ராதாபுரம் திசையன்விளை நாங்குநேரி தாலுகாக்கள் வறட்சி நிறைந்தவை. வெள்ள காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை கால்வாய்கள் அமைத்து இந்த பகுதிகளுக்கு திருப்பி விடுவதன் மூலம் இங்கு விவசாயத்தை செழிப்படைய வைக்க  வெள்ளநீர் கால்வாய் திட்டம் தீட்டப்பட்டது. கடந்த 2004 -ஆம் ஆண்டு  முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இந்த திட்டத்தை அறிவித்தார்.

நான்கு கட்டங்களாக பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதல், இரண்டாம் கட்டப்பணிகள் தி.மு.க ஆட்சிக் காலத்திலும் மூன்றாம் கட்ட பணிகள் அ.தி.மு.க ஆட்சிக் காலத்திகூலும் நிறைவெற்றப்பட்டன. நான்காம் கட்ட பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அலுவலகத்திடம் அனுமதி பெறுவதில் சிக்கல் நீடித்து வந்தது. 2011- ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மத்திய அரசிடம் போராடி அனுமதியை பெற்றார். இதையடுத்து, நான்காம் கட்ட பணிகளுக்காக ரூ. 161 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நான்காம் கட்ட பணியின் தொடக்க விழா திசையன்விளை அருகேயுள்ள ஆயன்குளத்தில் நேற்று நடைபெற்றது. ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். நான்காம் கட்ட திட்டத்தின் மூலம் மொத்தம் 5 , 220 கிணறுகள் 252 குளங்களுக்கு நீர் கொண்டு வர முடியும். கிட்டத்தட்ட 23,040 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நான்காம் கட்டப் பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் நிறைவடைந்து விடும். இந்த கால்வாய் மூலம் வருகிற தாமிரபரணி நீரால் திசையன்விளையில்  உள்ள எம்எல்தேரி- ஆயன்குளம் படுகை  முழுமையாக நிரம்பும் என்பதால் அந்த பகுதி மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments