கள்ளக்குறிச்சி : 'துரோகம் செய்த தாய் மாமன்'- கொலையில் முடிந்த பரிதாபம்

0 12804
கொலையான திருநாவுக்கரசு

கள்ளக்குறிச்சியில் பணமோசடி செய்த தாய்மாமாவை தாக்கி கொலை செய்த இளைஞர் மற்றும் இளம் பெண்ணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மோரைபாதை தெருவில் திருநாவுக்கரசு என்பவரும், அவரின் தங்கை சுசீலா குடும்பத்தினரும் அருகருகே வசித்து வருகின்றனர். திருநாவுக்கரசு யாருடைய ஆதரவுமின்றி தனியாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இவரின் மனைவியும் மகளும் கருத்துவேறுபாடு காரணமாக  25 வருடங்களாக சேலத்தில் தனியாக வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. தங்கை சுசிலாவின் குடும்பம்தான் திருநாவுக்காரசுக்கு ஆதரவாக இருந்துள்ளது.

கணவர் இறந்து விட்ட நிலையில், சுசிலா தங்களது குடும்ப சொத்தான பழைய ரைஸ்மில்லை அண்ணன் திருநாவுக்கரசுக்கு பவர் செய்து கொடுத்துள்ளார். தனக்கு பவர் கிடைத்ததால் திருநாவுக்கரசு அந்த ரைஸ் மில்லை ரூ 1. 6 கோடிக்கு  விற்பனை செய்துள்ளார். ரைஸ்மில் விற்ற பணத்தில் தனது தங்கை சுசிலா குடும்பத்திற்கு ‘கொஞ்சம் தொகையை கொடுத்து விட்டு, மீதி பணத்தை பிறகு தருகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும், அந்த பணத்தை திருநாவுக்கரசு வட்டிக்கும் விட்டு வந்துள்ளார்.  

இதற்கிடையில் ,சுசிலா குடும்பத்தாருக்கு ஜவுளி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், தங்களுக்கு தர வேண்டிய பணத்தை திருநாவுக்கரசுவிடம் கேட்டுள்ளனர். இதன் காரணமாக,  சுசீலா குடும்பத்துக்கும் திருநாவுக்கரசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த சுசீலாவின் மகன் சர்வேஷ்வரனும் மகள் ராணியும் திருநாவுக்கரசை பிடித்து அருகில் இந்த சுவற்றின் மீது தள்ளி விட்டனர். இதில், திருநாவுக்கரசின் பின்னந்தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்து போனார். தொடர்ந்து, இதையடுத்து, சர்வேஷ்வரன் , ராணியும் ஆகியோர் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments