ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலால் தடை விதிக்கப்பட்ட தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்தியா குற்றச்சாட்டு
ஐநா.பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் தாவூத் இப்ராகிம், மசூத் அசார், லக்வி போன்றோர் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
பாரிஸ் நகரில் இயங்கும் FATF என்ற சர்வதேச நிதிக்கட்டுப்பாட்டு அமைப்பின் கூட்டம் இன்று நிறைவடைகிறது. இக்கூட்டத்தில் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானை தொடர்ந்து கிரே பட்டியலில் வைப்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
Comments