தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நவராத்திரி விழாவின் 6ஆம் நாள் விழா கோலாகலம்

0 1578
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நவராத்திரி விழாவின் 6ஆம் நாள் விழா கோலாகலம்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நவராத்திரி விழாவின் 6ஆம் நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நவராத்திரி விழாவின் 6ஆம் நாளான நேற்று பர்வதவர்த்தினி அம்பாள் சாரதாம்பிகை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே படவேட்டு எல்லையம்மன் கோவிலில் நவராத்திரி ஆறாம் நாளான நேற்று புட்லூர் புங்காவனத்தம்மன் அலங்காரத்தில் உற்சவர் ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

 

காரைக்காலில் நவராத்திரியை முன்னிட்டு கைலாசநாதர் சுவாமி ஆலயத்தில் நவராத்திரி விழாவின் 6ஆம் நாளான நேற்று சுந்தராம்பாள் சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments