நீர்மூழ்கி கப்பல்களின் சிம்ம சொப்பனம்
நீர்மூழ்கி கப்பல்களை தேடி அழிக்கும் நவீன போர் கப்பல் இந்திய கடற்படையின் இன்று முதல் இணைக்கப்பட்டுள்ளது.
நீர்மூழ்கி கப்பல்களை தேடி அழிக்கும் போர் கப்பல்களை இந்திய கடற்படையில் இணைக்கவும், அவற்றை உள்நாட்டிலேயே கட்டிமுடிக்கவும் கடந்த 2003 ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்த து. இதில் 4 கப்பல்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதில், INS Kamorta கப்பல் 2014 ஆம் ஆண்டிலும், INS Kadmatt கப்பல் 2016ஆம் ஆண்டிலும், INS Kiltan கப்பல் 2017-ஆம் ஆண்டிலும் கடற்படையிலும் இணைக்கப்பட்டன. நான்காவது கப்பலான ஐ.என்.எஸ். கவராட்டி இன்று முதல் கடற்படையில் இணைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த கப்பலை ராணுவ தளபதி நரவானே, முறைப்படி கடற்படையில் இணைத்து வைத்தார்.
கவராட்டி கப்பல் முழுக்க முழுக்க இந்திய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் கப்பல் கட்டுமான நிறுவனம் இந்த கப்பலை கட்டி உள்ளது.
3300 டன் எடையும், 358 அடி நீளமும், 42 அடி அகலும் கொண்டதாக கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. மணிக்கு 46 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த கப்பல், இடை நில்லாமல் 5,550 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க கூடியது. 123 பேர் பயணிக்க கூடிய இந்த கப்பலில் அதி நவீன தொலை தொடர்பு சாதனங்கள் உள்ளன.
அத்துடன் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட நவீன ஆயுதங்கள் உள்ளன. இந்த கப்பலில் உள்ள தொலை உணர் தொழில் நுட்பத்தின் மூலம் எதிரிகளின் நீர் மூழ்கி கப்பல்கள் இயங்காமல் நிறுத்தப்பட்டிருந்தாலும் கண்டறிய முடியும். எதிரிகளின் விமானங்கள், ஏவுகணைகள், கப்பல்களை தகர்க்கும் ஓட்டா மெலிரா பீரங்கி உள்ளது. அந்த பீரங்கி ஒரு நொடியில் 120 ரவுண்டு சுடும் வல்லமை கொண்டது.
இதே போல 6 பேரல்களை கொண்டதும், கப்பலை தாக்கும் ஏவுகணைகளை துண்டாடும் வல்லமை கொண்டதுமான ஏ.கே.630 பீரங்கியும் கப்பலில் உள்ளது.
1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும், ஒரே முறையில் 12 ராக்கெட்டுகளை ஏவும் ஆர்.பி.யு-6000 கருவியும் உள்ளது. இத்துடன் விண்ணில் உள்ள இலக்கை தாக்கும் பாரக் ஏவுகணையும், வெஸ்ட் லேண்ட் சீ கிங் ஹெலிகாப்டரும் கப்பலில் உள்ளது.
Comments