பாலகோட்டில் மீண்டும் செயல்பட தொடங்கிய பயங்கரவாத முகாம் - உளவுத்துறை தகவல்

0 1619
பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை பாகிஸ்தான் மீண்டும் திறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை பாகிஸ்தான் மீண்டும் திறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அங்கிருந்த பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமை, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி இந்திய விமானப்படை துல்லிய தாக்குதல் நடத்தி அழித்தது.

இது நடைபெற்று 18 மாதங்களுக்கு பிறகு, பயங்கரவாதிகள் முகாமை, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. திறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெய்ஸ் -இ- முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதியான சுபேர் தலைமையில் அங்கு பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. சுபேர், இப்போது இந்தியாவில் நாசவேலை நடத்த பாலகோட் முகாமில், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.

கட்டுபாட்டு அறை அமைத்து,  இந்தியாவில் ஊடுருவும், பயங்கரவாதிகளை அந்த அறை மூலம்,தொடர்பு கொண்டு சங்கேத வார்த்தைகளில் கட்டளை பிறப்பித்து வருவதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments