இந்திய எல்லை இன்று முதல் திறக்கப்பட்டாலும், எல்லையை திறக்க நேபாளம் மறுப்பு
இந்திய தரப்பில் எல்லை திறக்கப்பட்ட போதிலும், தனது எல்லையை திறக்க நேபாளம் மறுத்துள்ளது.பீகார் மாநிலத்தின் சாம்ப்ரான் மாவட்டத்தைச் சேர்ந்த ரக்சல் கிராமத்தில் உள்ள இந்தியா - நேபாள எல்லை, கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்டது.
கடந்த 7 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் இந்த எல்லையை திறக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இந்திய தரப்பில் உள்ள எல்லையை அதிகாரிகள் திறந்தனர்.
ஆனால் மறு புறத்தில் உள்ள எல்லையை நேபாள அரசு திறக்க மறுத்துள்ளது. மேலும் அங்கு எல்லை பாதுகாப்பு படையினரை குவித்துள்ள நேபாள அரசு, நவம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை எல்லையை திறக்க முடியாது என்று அறிவித்துள்ளது.
இதனால் எல்லையோர கிராமங்களில் உள்ள மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
Comments