நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில், ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய வங்க கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதாகசென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது விரைவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, பாம்பன் ஆகிய இடங்களில், துறைமுகப் பகுதிகளில், ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாக கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது எனப் பொருளாகும்.
இதனால், துறைமுகப் பகுதிகள் உள்ளிட்டவை பாதிக்கப்படாது என்றாலும், சற்றே பலமாக காற்று வீசுகிறது என்பதை எச்சரிக்கும் விதமாகவே, ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்படுகிறது.
Comments