லே நகரை சீனாவின் பகுதியாக சித்தரித்த டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

0 2636
லே நகரை சீனாவின் பகுதியாக சித்தரித்த டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

பத்திரிகையாளர் ஒருவரின் நேரடி ஒளிபரப்பில், லே நகரை சீனாவின் பகுதி என குறிப்பிட்ட டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சேவுக்கு அனுப்பிய கடிதத்தில், இந்தியாவின் வரைபடத்தை தவறாக சித்தரித்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என மத்திய ஐடி துறை செயலர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான இது போன்ற லொகேஷன் செட்டிங்குளை வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் மீது தவறான எண்ணத்தையும், அதன் நடுநிலைத்தன்மை குறித்த சந்தேகங்களையும் ஏற்படுத்தும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments