புதிய கல்விக் கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை

0 1073
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை

தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் வகையில், உயர்கல்வி நிறுவனங்கள் நிர்வாக சீரமைப்புப் பணிகளை துவங்க பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் அடுத்தக்கட்ட நவடிக்கைகள் என்ன என்பது குறித்து உயர்கல்வி செயலாளர் அபூர்வா உள்ளிட்ட அதிகாரிகளுடன், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments