காஞ்சி கோயிலில் தமிழில் திவ்ய பிரபந்தம் பாட முயன்றவர் தடுத்து நிறுத்தம்... தள்ளுமுள்ளுவால் பரபரப்பு!

0 23631

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மணவாள மாமுனிகளின் உற்சவ விழாவில் தமிழில் திவ்ய பிரபந்தம் பாடியவரை பாகவதர்கள் தடுத்து நிறுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் மணவாள மாமுனிகளின், 650- வது உற்சவ விழா, 12- ம் தேதி தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு எளிமையாக விழா நடந்தது. விழாவின் 10 - ஆம்  நாளான நேற்றிரவு சாற்றுமுறை விழாவும் நடைபெற்றது. அதில் மணவாள மாமுனிவர் சன்னதியில் சமத்துவ வழிபாடு நடத்த வலியுறுத்தியும், இந்து அறநிலைத் துறை ஆணையர் உத்தரவை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் திவ்ய பிரபந்த பாடல்களை தமிழில் பாட ஓரு தரப்பினர் முயன்றனர். இதை, தென்கலையைச் சார்ந்தவர்கள் தடுத்ததால், மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

image

வரதராஜ பெருமாள் கோயிலில் மணவாள மாமுனிவர் சந்நதியின் மணடபத்தில் தென்கலையைச் சேர்ந்தவர்கள் உள்ளே சென்று  வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். பிற, இந்துக்கள் வாசற்படி வெளிப்புறத்தில் மட்டுமே நாலாயிர திவ்விய பிரபந்தம் பாடமுடியும். மாமுனிவர் மண்டபத்தில் உட்புறம் சென்று பாடல் ஓதவும், சடாரி, பிரசாதம், தீர்த்தம் போன்றவற்றை பெறவும் அனுமதி கிடையாது. அதே போல, தமிழில் திவ்ய பிரபந்தம் பாட வருபவர்களையும் அனுமதிப்பதில்லை.

நேற்று சாற்றுமுறை விழாவின் போது மணவாள மாமுனிகள் சந்நிதியில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழில் திவ்ய பிரபந்தம் பாட முயன்ற திருமாலடியார் மாதவ ராமனுஜ தாசனை தென்கலையைச் சார்ந்தவர்கள் கீழே தள்ளி விட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இருதரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால்,  காவல்துறையினர் கோயில் உள்ளே நுழைந்து இரு தரப்பினரையும் எச்சரித்து விலக்கி விட்டனர்.

மேலும், மணவாள மாமுனிகள் சன்னதியில் உள்ளே அமர்ந்து பாடிக்கொண்டிருந்த தென்கலை பிரிவை சேர்ந்த பாகவதர்களையும் காவல்துறையினர் வெளியே அனுப்பி காவல்துறையினர் இந்த பிரச்சனையைத் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி தியாகராஜன், “சாற்றுமுறை முடிந்து சுவாமி புறப்பாட்டின் போது தமிழ் முந்தியும், வேதம் பிந்தியும் செல்வது மரபு. ஆனாலும், நேற்று ஒருகுழுவினர் முன்னே சென்று வேதம் படித்தனர். அவர்களுடன் சேர்ந்து தென்கலையைச் சேர்ந்தவர்களும் அதே வேதத்தைப் படித்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது” என்று தெரிவித்தார். 

வரதராஜ பெருமாள் கோயிலில் நீண்ட காலமாகவே நிலவிவரும் இந்த பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க கோரி இந்து சமய அறநிலைத்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை. மணவாள மாமுனிவர் சந்நதியினர்தான் இந்த பிரச்னைக்கு காரணமாக இருப்பதாகவும் ஒரு தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments