சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றி 196 நாட்களுக்குப் பிறகு பூமிக்கு திரும்பினார் நாசா விண்வெளி வீரர்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிந்த நாசா விண்வெளி வீரர், 196 நாட்களுக்குப் பிறகு பூமிக்கு திரும்பினார்.
தனது மூன்றாவது விண்வெளிப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து திரும்பிய கிறிஸ் கசிடியுடன் (Chris Cassidy), அவரது குழுவினரான ரஷ்ய விண்வெளி வீரர்கள் இவான் வாக்னர், அனடோலி இவானிஷின் (Ivan Vagner and Anatoly Ivanishin) ஆகியோரும் கஜகஸ்தான் நாட்டில் உள்ள டிஜெஸ்கஸ்கனில் (Dzhezkazgan) தரையிறங்கினர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் எக்ஸ்படீசன் 63 (Expedition 63) என்ற பணித்திட்டத்தில் கமாண்டராக பணியாற்றிய காசிடி, புவி ஈர்ப்பு விசை குறித்த பல்வேறு ஆய்வுகளில் பங்காற்றினார்.
Comments