வேட்டைக்காரன் கார்னோட்டாரஸ் முதல் பரம சாது சௌரபோட்ஸ் வரை... பெரம்பலூரில் மீண்டும் டைனசர் முட்டைகள்!

0 30888
மாமிச உண்ணி கார்னோட்டாரஸ் மற்றும் முட்டைகள்

பெரம்பலூர் அருகே பலகோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட டைனோசர் முட்டைகள்  மற்று கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிலப்பரப்புகள்  ஒரு காலத்தில் கடலில் மூழ்கி இருந்தன. பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட புவியியல் மாற்றத்தினால் ஏராளமான வன விலங்குகளும் கடல் வாழ் உயிரினங்களும் அழிந்து போயின. அவற்றின் படிமங்கள் ஏரி, குளங்களைத் தூர்வாரும்போது அவ்வப்போது கிடைத்து வருகின்றன.

image

பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள குன்னம் கிராமத்தில், 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெங்கட்டான் குளத்தில் வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியின் போது ஜேசிபி., இயந்திரத்தின் மூலம் குளத்தின் நடுவே தோண்டிய போது, பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய வகை விலங்கான டைனோசரின் 100 க்கும் மேற்பட்ட முட்டைகள் கிடைத்தன. கடல் ஆமை, கடல் நத்தை மற்றும் கடல் சங்கு உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கல் மரங்கள் படிமங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் அளித்த தகவலின் பேரில், வருவாய் துறையினர்  மற்றும் தொல்லியியல் துறை ஆய்வாளர்கள் குன்னம் கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். ஆய்வில் அசைவம் சாப்பிடும்  கார்னோட்டாரஸ் மற்றும் இலை, தழைகள் உண்ணும் சைவ சௌரபோட் டைனோசரின் முட்டைகள் என்பது தெரிய வந்தது. இதில் சைவமான சௌரபோட்ஸ் நீண்ட கழுத்தைக் கொண்டு, அதிக உயரமாக வளரக் கூடியவை. இந்த டைனோசர் முட்டைகள், சுமார் 12 முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதற்குமுன், கார்னோட்டாரஸ் டைனோசர்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் சுற்றித் திரிந்த தடயங்கள்  கிடைத்துள்ளன. கார்னோட்டரஸ் வேகமாக ஓடக்கூடிய சுறுசுறுப்பான விலங்கினம். சுமார் ஒன்றரை டன் வரை எடையும், சுமார் 30 அடி நீளமும் கொண்டது. பெரிய கால் தசைகள் கொண்ட, வேட்டையாடும் திறமையும் கொண்டதாக சொல்லப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments