ஆப்பிள் வாட்ச் மூலம் காப்பாற்றப்பட்ட முதியவரின் உயிர்

0 4751
ஆப்பிள் வாட்ச் மூலம் காப்பாற்றப்பட்ட முதியவரின் உயிர்

ஆப்பிள் வாட்சில் உள்ள இதயத் துடிப்பை அளவிடும் சென்சார் மூலம் 61 வயது முதியவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சித்தார்த் என்பவர், தனது தந்தை ராஜன்ஸ்க்கு ஆப்பிள் வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார்.

உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ராஜன்ஸ், இரவு நேரங்களில் தனது இதயத்துடிப்பு சீரற்ற வேகத்தில் இருப்பதை ஆப்பிள் வாட்ச் நோட்டிபிகேஷன் மூலம் அறிந்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு இதய வால்வுகளில் பிரச்சனை உள்ளது தெரியவந்தது.

உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மாரடைப்பு ஏற்படும் அபாயத்தில் இருந்து அவர் காப்பாற்றப்பட்டார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments