பண்டிகை நாட்களை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை அறிவித்த ஆன்லைன் நிறுவனங்கள்
இந்தியாவில் ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்தன.
இதனால் கடந்த நான்கரை நாட்களில் மட்டும் இந்தியாவிலிருந்து மொத்தம் 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆன்லைன் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
இந்த நிறுவனங்கள் ஒருமாத இலக்காக 7 பில்லியன் டாலரை நிர்ணயம் செய்திருந்தன. ஆனால் நான்கரை நாட்களிலேயே 4 பில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை நடந்துள்ளது.
இதனால் இனிவரும் நாட்களில் குறிப்பிட்ட நிறுவனங்கள் எதிர்பார்த்த 7 பில்லியன் டாலரைக் கடந்து விற்பனை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
Comments