மகாராஷ்ட்ராவில் கனமழை காரணமாக நாசமான வெங்காய பயிர்கள் : வெங்காயம் விலை கிலோ ரூ 120 ஆக உயர்வு
அண்மையில் பெய்த கனமழை காரணமாக மகாராஷ்ட்ராவில் வெங்காய மூட்டைகளின் வரத்து குறைந்ததால் தற்போது கிலோ 120 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனையாகிறது.
மழையால் பல்லாயிரம் ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துவிட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக வெங்காய விலை ஏறுமுகமாக உள்ளது.
மும்பை, புனே போன்ற நகரங்களில் கிலோ 120 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனையாகிறது. மத்திய அரசு வெங்காய இறக்குமதிகள் மீதான தடைகளைத் தளர்த்தியிருப்பதால் வரும் நாட்களில் வெங்காயம் வரத்து அதிகமாகும் என்றும் விலை குறையும் என்றும் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
Comments